ETV Bharat / state

பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்த சிறுமி - 10 லட்சம் இழப்பீடு வழங்கும் 7 ஸ்டார் உணவகம் - 10 லட்ச ரூபாய் இழப்பீடு

பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்த சிறுமி லோசினியின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு தருவதாக கூறியதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் ஆரணி பிரியாணி கடை உரிமையாளர், சமையல்காரருக்கு நிபந்தனை பிணை வழங்கியுள்ளது.

Food poisoning dead, 10 lakhs compensation, பிரியாணி மரணம், 7 ஸ்டார் ஹோட்டல், 7 ஸ்டார் உணவகம், ஆரணி 7 ஸ்டார் உணவகம், arani 7 star hotel, aarani 7 star hotel biryani death, conditional bail, 10 lakhs Compensation, thiruvannamalai biriyani death, திருவண்ணாமலை பிரியாணி, 7 ஸ்டார் பிரியாணி, 10 லட்ச ரூபாய் இழப்பீடு, சிறுமி லோசினி
10 லட்சம் இழப்பீடு கொடுக்கும் 7 ஸ்டார் உணவகம்
author img

By

Published : Oct 22, 2021, 8:00 PM IST

திருவண்ணாமலை: ஆரணியில் நகர பழைய பேருந்து நிலையம் அருகே 7 ஸ்டார் பிரியாணி கடையில், துந்தரீகம்பேட்டைச் சேர்ந்த ஆனந்த், தன் மனைவி பிரியதர்ஷினி, 14 வயது மகன் சரண், 10 வயது மகள் லோசினி ஆகியோருடன் செப்டம்பர் 8ஆம் தேதி பிரியாணி, தந்தூரி சிக்கன் சாப்பிட்டு, வீடு திரும்பிய நிலையில், அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து தொடர்ச்சியாக மொத்தம் 19 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த, சிறுமி லோசினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி நகர காவல் நிலையத்தில் இறந்த சிறுமியின் தாய் பிரியதர்ஷினி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரியாணி கடை உரிமையாளர் அம்ஜத் பாஷா, சமையல்காரர் முனியாண்டி ஆகியோர் செப்டம்பர் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் பிணை கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் உணவகத்தை தரமாக பராமரித்து வருவதாகவும், கவனக்குறைவு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, 40 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதையும், இழப்பீடு வழங்குவதையும் கருத்தில்கொண்டு, இரண்டு வாரங்களுக்கு தினமும் காலை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் செலுத்தியதற்கான ஆவணங்களை ஆரணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பிணைக்கான உத்தரவை பெற்றுக்கொள்ளவும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: உணவகத்தில் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு - 19 பேர் மருத்துவமனையில் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.