ETV Bharat / state

மோடி ஆட்சியை அகற்ற எதிர்கட்சிகளை ஸ்டாலின் ஒன்று திரட்டுகிறார் - ஆ.ராசா ஆவேசம் - திமுக

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஆ.ராசா எம்.பி, மோடி ஆட்சியை அகற்றுவதற்காக ஸ்டாலின் எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து வருவதாகவும், அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் என்றும், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஸ்டாலினிடம் உள்ளதாவும் பேசியுள்ளார்.

A raja MP said in Tiruvannamalai meeting Stalin gathering the opposition parties to remove the Modi government
மோடி ஆட்சியை அகற்ற எதிர்கட்சிகளை ஸ்டாலின் ஒன்று திரட்டுவதாக திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆ ராசா எம்பி தெரிவித்துள்ளார்
author img

By

Published : Apr 11, 2023, 5:56 PM IST

மோடி ஆட்சியை அகற்ற எதிர்கட்சிகளை ஸ்டாலின் ஒன்று திரட்டுவதாக திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆ ராசா எம்பி தெரிவித்துள்ளார்

திருவண்ணாமலை: தமிழக முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுகவின் சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலையின் முன்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர் இராஸ்ரீதரன், மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் திமுக கழக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “கரோனா காலத்தில் வெளியே வந்து கரோனா வார்டுக்கு சென்ற ஒரே தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். ஆபத்துக் காலத்தில் கலைஞரின் பிள்ளை ஸ்டாலின் நான் உள்ளேன் என்ற உறுதியை ஏற்படுத்தித் தந்த தலைவர் ஸ்டாலின். தமிழர்களின் தலையெழுத்தை மாற்றியது கலைஞரின் பேனா, இந்த பேனா நினைவுச் சின்னத்திற்கு தற்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

திராவிட மாதிரிக்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், அவர் வைத்திருந்த பேனாவுக்கு 80 கோடி ரூபாய் மதிப்பில் கடற்கரையில் நினைவுச்சின்னம் அமைக்கக் கூடாது என்று எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் ஒதுக்கிய போது, பல பின் தங்கிய சமுதாயத்திற்கு அங்கீகாரமும் கல்வியும் அதிகாரமும் வழங்கி தமிழை வளர்த்த கலைஞரின் பேனாவுக்கு ஏன் கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் வைக்கக் கூடாது.

தமிழர்களின் வாழ்க்கையில் இந்த பேனா எவ்வளவு மறுமலர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்று தெரியுமா? பிஜேபி ஆட்சியில் திமுக கூட்டணியிலிருந்த போதும் பிஜேபியின் மத திணிப்புகளைத் தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்ற சித்தாந்த ரீதியில் தான் திமுக கூட்டணி வைத்தது. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் இருந்தபோது தமிழகத்தில் மதத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. ஆனால் தற்போது பாஜக இருக்கும்போது தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதத்திற்கு, நீதித்துறையிலும் காவி புகுந்து மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளபோது இந்தியாவில் பாஜகவின் அச்சுறுத்தல் இல்லை ஆனால் தற்போது பாஜக மிகப்பெரிய மத அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதனால் தான் இந்தியாவில் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காகவே எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி வருபவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

மோடியின் மீது குற்றச்சாட்டு உள்ளது, அதை நீங்கள் நிரூபியுங்கள் என்று தான் நாங்கள் சொல்லி வருகிறோம். அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் என்பதை கேட்பதற்கு உள்ள ஒரே தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்றைக்கு காவியை விரட்டி அடித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு இந்தியாவில் ஒரு ஜனநாயக ஆட்சி ஏற்படுத்துவதற்காக உள்ள ஒரே தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பாஜகவுக்கு ஆதரவாக உள்ள நிலையில் தமிழகம் மட்டும் பாஜகவுக்கு எதிராக உள்ளது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தோளில் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே உள்ளது. குறிப்பாக இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஸ்டாலினிடம் உள்ளது. ஸ்டாலின் வாழ்ந்தால் தான் இந்தியாவே வாழும்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உள்ள கூடை பயிற்சி மையத்தை வாரணாசிக்கு மாற்ற திட்டம் - மத்திய அமைச்சருக்கு மதுரை எம்.பி அவசர கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.