ETV Bharat / state

மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது! - assault of a mentally disabled woman

திருவண்ணாமலை: மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பாக்கிய 60 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

60 years old man arrest
60 years old man arrest
author img

By

Published : May 24, 2021, 7:51 AM IST

திருவண்ணாமலை அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். மனவளர்ச்சி குன்றிய இவருக்கு, அந்தப்பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துவந்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பெண்ணின் தாய், சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், உடன்பிறந்தவர்களுடன் அந்தப் பெண் வசித்துவருகிறார். இந்தநிலையில், சில நாள்களாக அப்பெண் உடல்நலம் குன்றி காணப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது, அவர் 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் நேற்று முன்தினம் (மே.22) புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் தனது உறவினர்களுடன் கடந்த 5 மாதத்திற்கு முன்பு ஆடு மேய்க்கச் சென்றதும், அப்போது பரசுராமன் (60) என்பவர் இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை அனைத்து அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் பரசுராமனை கைது செய்து, மகிளா நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 'பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் ஈடுபடுவீர்' - திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.