திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விவேகானந்தர் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்த ராஜசேகர்(52), மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் அனைவரும் நேற்றிரவு வீட்டை பூட்டிவிட்டு ராஜசேகரை பார்க்க சென்னை சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று வீட்டிற்கு திரும்பிய ராஜசேகர் குடும்பத்தினர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்க்கையில், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள், 3 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆரணி கிராமிய காவல் துறையினர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.