திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூன் 29) வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1, 803ஆக இருந்தது. இன்று (ஜூன் 30) புதிதாக 16 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது. இதனால் மாவட்டம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1, 819ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (ஜூன் 29) வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 615ஆக உள்ளது.
பெங்களூரில் இருந்து வந்த இரண்டு பேர், சென்னையில் இருந்து மூன்று பேர், புறநோயாளிகள் பிரிவில் மூன்று பேர், மேலும் பிற மாவட்டங்களில் இருந்து வந்த எட்டு பேர் என மொத்தம் 16 பேருக்கு இன்று (ஜூன் 30) நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனாவால் பாதிக்கப்பட்டோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கரோனா மையங்கள் ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க : திருவண்ணாமலையில் ஊரடங்கைப் பயன்படுத்தி மணல் கடத்தல் - 5 பேர் கைது!