ETV Bharat / state

தொடர்ந்து பிடிபடும் கள்ளச்சாராயம்! அதிரடி காட்டும் எஸ்பி! - கள்ளச்சாராயம் அழிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே16 அன்று மதுஒழிப்புத் துறையினரும், காவல் துறையினரும் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 3400 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 150 லிட்டர் கள்ளச்சாரயத்தை காவல் துறையினர் கண்டுபிடித்து அழித்துள்ளனர்.

illicit liquor sellers arrested tiruvannamalai

author img

By

Published : May 18, 2020, 12:16 PM IST

திருவண்ணாமலை: 1000 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறலையும், 150 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் மதுவிலக்கு காவல் துறையினர் கைப்பற்றி அழித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தியின் உத்தரவுப்படி, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் மேற்பார்வையில் காவல் துறையினர் நடத்திய மதுவிலக்கு தேடுதல் வேட்டையில், மதுரம்பட்டு பகுதியில் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

பல இடங்களிலிருந்து 3400 லிட்டர் கள்ளச்சாராயம்... வளைத்துப் பிடித்த காவல்துறை!

ஜமுனாமரத்தூர் தாலுக்கா, பாலமதி பகுதியில் 75 லிட்டர் கள்ளச்சாராயம் வைத்திருந்த ஏழுமலை, சங்கர், செங்கம் தாலுக்கா அன்னந்தல் பகுதியில் 75 லிட்டர் விற்பனைக்காக வைத்திருந்த வாசுதேவன், சங்கர், சக்திவேல், முனியன் என்பவர்களையும் காவல் துறையினர் கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.