திருவள்ளூர்: Foxconn factory Rumor case: யூ-ட்யூபர் சாட்டை முருகன் என்பவர் ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் குறித்து தனது யூ-ட்யூப் சேனலில் டிசம்பர் 19ஆம் தேதி காணொலி ஒன்றைப் பதிவேற்றியிருந்தார்.
அந்தக் காணொலியில் தரமற்ற விடுதி உணவை சாப்பிட்ட ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் சிலர் இறந்து விட்டதாகப் பதிவிட்டு வதந்தி பரப்பியதாகக் கூறப்படுகிறது.
துரைமுருகன் மீது எதற்கு வழக்குப்பதிவு:
இதனையடுத்து பூந்தமல்லி தாசில்தார் யூ-ட்யூபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருவள்ளூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரப்புவது, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவது உள்ளிட்டப் பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் டிசம்பர் 20ஆம் தேதி யூ-ட்யூபர் சாட்டை துரைமுருகனை கைது செய்த காவல் துறையினர், அவரை திருவள்ளூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து சாட்டை துரைமுருகன் ஜாமீன் வழங்கக்கோரி, திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (டிசம்பர் 23) இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு மீதான விசாரணையை, வருகின்ற ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து; ரயில் பயணிகளிடம் கைவரிசை - இளைஞர் கைது