திருவள்ளூர்: மாவட்டம் கரையம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (27). இவர் தனியார் டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களுடன் சேர்ந்து பூங்காநகர் பகுதியில் சிக்கன் சென்டர் நடத்தி வந்தார்.
நேற்று (அக்.17) ஜெகதீசன் சிக்கன் சென்டரில் இருந்து வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இளைஞர் வெட்டிக் கொலை
இதனிடையே சிவன்வாயில் திரிபுரசுந்தரி அம்மன் கோயில் அருகில் ஜெகதீசன் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெகதீசனை கடன் கொடுத்தவர்கள் கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் அவரது கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சினிமா பாணியில் சிலை கடத்தல்: 7 பேர் கைது