திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குள்பட்ட வைரவன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் பன்னீர் (19).
இவர் நேற்று (ஏப். 23) மாலை பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்ணை அடித்து காயப்படுத்தி முள்புதரில் கொண்டுசென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யவும் முயற்சி செய்துள்ளார். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவர பன்னீர் அவ்விடத்தைவிட்டு தலைமறைவானார்.
அதனையடுத்து, பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அப்பெண்ணை பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பழவேற்காட்டில் அப்பெண்ணுக்குத் தீவிர சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து திருப்பாலைவனம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை மேற்கொண்டு பன்னீரை கைதுசெய்து அடுத்தகட்ட விசாரணையை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆக்சிஜன் பற்றாக்குறையால் தொடரும் மரணங்கள்... கதறும் டெல்லி மருத்துவமனைகள்!