திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் ஆரம்பாக்கம் பகுதியில் புதிதாக அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடையில் நேற்று (டிச.20) இரவு மது அருந்தி விட்டு எகுமதுரை பழங்குடியின குடியிருப்பைச் சேர்ந்த நரேஷ் (22), நாரேந்தர், விஜி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர்.
அப்போது அவர்கள் மதுபோதையில் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் நரேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து படுகாயத்துடன் இருந்த நாரேந்தர், விஜி ஆகியோரை சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு!