திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் ஏ.சி.சி.எஸ். தனியார் தொழிற்சாலை ஆனது கடந்த 5 மாதங்களாக கரோனா தொற்று காரணமாக தொழிற்சாலை திறக்கப்படாமல் இருந்தது.
ஆனால் தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகளை இயக்க 100 விழுக்காடு அனுமதி வழங்கிய பின்னரும் கடந்த மார்ச் மாதம் முடிய தொழிற்சாலையை இன்றுவரை திறக்க மறுக்கும் தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் 17 மாதகால சம்பள நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பினர். பின்னர் தொழிற்சாலை நிர்வாகம் கலந்தாலோசனை செய்து முடிவு காண்பதாக உறுதி அளித்த பின் தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் அங்கு மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.
தொழிற்சாலையை திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம் - கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலை
திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகளை 100 விழுக்காடு இயக்க அனுமதி அளித்த பின்னரும் தொழிற்சாலையை இயக்க தொழிற்சாலை நிர்வாகம் மறுப்பதைக் கண்டித்தும், 17 மாத கால சம்பள நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.