திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் ஸ்ரீ சோலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 24ஆம் ஆண்டாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட 108 குத்துவிளக்குகளுக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் கூற, பெண் பக்தர்கள் அதைனை திருப்பி கூறியும், மழை வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், குழந்தைகள் நல்ல முறையில் படிக்கவும், உலக அமைதி பெறவும் வேண்டி பூஜைகள் நடைபெற்றது.
இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!