திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையம் அருகில் இளம்பெண் ஒருவர் இரு குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலையடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதைத்தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட பெண் சேக்காடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரது மனைவி விஜயலட்சுமி (22), அவரது குழந்தைகள் கவிசேரன், இரண்டு மாத குழந்தை நிஸ்வந்த் என்பது தெரியவந்தது.
மேலும் அவரது தற்கொலை காரணமாகக் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். இந்தத் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காதலை ஏற்க மறுத்த பெண் - தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு