திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அங்கு போதிய வசதிகள் இல்லாததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு நேற்று மதியம் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் சரிவர மருத்துவம் பார்க்காமல் அலைகழித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மருத்துவர்கள் செல்வியை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்போவதாகவும் அதற்காக அவசர ஊர்தி 108 வாகனத்தை அழைத்துள்ளதாகவும் அவருடைய மகள் அஸ்வினியிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நான்கு மணி நேரம் ஆகியும் அவசர ஊர்தி வராததால் செல்வி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதனால் தனது தாய் இறப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியமும் அவசர ஊர்தி முறையான நேரத்துக்கு வராததும் தான் காரணம் என அஸ்வினி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க:
வீட்டின் பின்புறம் இறந்து கிடந்த பள்ளி மாணவி - போலீஸ் தீவிர விசாரணை