திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டை கரையை சேர்ந்த இப்ராஹீம் ஷா என்பவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கௌரிசங்கர் மீது புகார் அளித்துள்ளார்.
புகாரில் மேலக்கழனி ஊராட்சி மன்றத் தலைவர் பத்மஜாவின் கணவர் கௌரிசங்கர் சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பி வீடியோ வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கும்மிடிபூண்டி காவல்துறையினர் அவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.