ETV Bharat / state

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை: அரசுப் பேருந்தை சிறைப்பிடித்த கிராம மக்கள் - Thiruvallur

திருவள்ளூர்: குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்
author img

By

Published : May 28, 2019, 3:17 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூனிமாங்காடு காலனியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், கோடைகாலம் என்பதால் குழந்தைகளும், பெண்களும், வேலைக்குச் செல்வோரும் பெரும் துயரமடைந்துள்ளனர்.

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை: அரசுப் பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள்

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆவேசமடைந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன், இன்று காலை நல்லாட்டூர் திருத்தணி சாலையில் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், கிராம மக்கள் சமரசத்துக்கு மறுத்ததால், திருத்தணி வட்டாட்சியரால் நேரில் வந்து உறுதியளித்தார். இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

குடிநீர் வழங்காததைக் கண்டித்து அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:திருத்தணி அருகே 15 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் 200க்கும் மேற்பட்டோர் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூனை மாங்காடு காலனியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறுப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை நல்லாட்டூர் திருத்தணி சாலையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த அரசு பேருந்து சரிப்படுத்தும் சாலையில் கற்களை கொட்டியும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் முறையாக குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்த பிறகு கலைந்து செல்வோம் என திட்டவட்டமாக தெரிவித்தது எடுத்து திருத்தணி வட்டாட்சியர் செங்கல்லால் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விரைவில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து இரண்டு மணி நேர போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.