திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் சந்தானம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினர். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபடி, தண்ணீர் தொட்டி ஆபரேட்டர்களுக்கு ரூ. 1100 ஊதிய உயர்வு அரசாணை வெளியிட வேண்டும்,
வைரஸ் தொற்று பாதிப்பு நிவாரணமாக இரண்டு லட்சம் ஊழியர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் அரசாணைப்படி வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு படி, ரூ. 3 ஆயிரத்து 600 சம்பளத்துக்கு அரசாணை வெளியிட வேண்டும். மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி ஒப்பந்த உதவிக்குழு தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்,
குறைந்தபட்ச ஊதிய அரசாணை படி ரூ. 600 ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.