ETV Bharat / state

'வாத்தி கம்மிங்!' - திருத்தணி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

திருவள்ளூர்: திருத்தணி சார்பதிவாளர் அலுவலகம் மீது பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்ததால் லஞ்ச ஒழிப்புத்துறை ஏழு மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
author img

By

Published : Sep 18, 2020, 1:18 PM IST

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சார் பதிவாளர் அலுவலகம் காந்தி சாலையில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய அதிகப்பணம் லஞ்சமாக கேட்பதாகவும், அதுமட்டுமின்றி அனுமதி இல்லாத வீட்டுமனைகளைப் பதிவு செய்ய அதிக லஞ்சப் பணம் கேட்பதாகவும், இடைத்தரகர்கள் அதிக அளவு அலுவலகம் முன் குவிந்து பொதுமக்களிடம் பணம் கேட்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

மேலும், அனுமதி இல்லாத பத்திர எழுத்தர்கள், சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழியர்களுடன் தொடர் தொடர்பில் இருப்பதால் அதிகப்பணம் கேட்பதாகவும் புகார்கள் வந்த வண்ணம் இருந்திருக்கின்றன. இத்தனை புகார்களையும் ஒருங்கிணைத்த திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி குமரவேல், 10-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், திருவள்ளூர் மாவட்ட தனிப்படை அலுவலர் கோட்டீஸ்வரன் தலைமையில் திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையை நள்ளிரவில் செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

திருத்தணி சார் பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளர் கவிதா, அலுவலகப் பணியாளர்கள் புருஷோத், சுரேஷ் ஆகியவர்கள் இடத்தில் நள்ளிரவு வரை ஏழு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மேலும் அலுவலகத்தில் இருந்த தற்காலிகப் பெண் பணியாளர்கள், ஆண் பணியாளர்கள் ஆகியோர் இடத்தில் கணக்கில் வராத ரூபாய் 50 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்டுள்ள தற்காலிக ஊழியர்கள், அலுவலக உதவியாளர்கள், சார்பதிவாளர் (பொறுப்பு) கவிதா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு முறையாக திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரையும் முறையாக விசாரணை செய்து, இவர்கள் பணத்திற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை திருத்தணி பகுதியில் உள்ள பல அரசு அலுவலகங்களில் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மகனை கொன்றுவிட்டதாக தாய் புகார்; காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.