ETV Bharat / state

covid vaccination: 'தடுக்கி விழுந்தால் கரோனா தடுப்பூசி முகாம்'

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் பணிகள், தமிழ்நாடு அரசின் வீடு தேடி மருத்துவம் ஆகிய திட்டப் பணிகளை வீடு வீடாகச் சென்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வுமேற்கொண்டார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
author img

By

Published : Nov 15, 2021, 8:00 AM IST

திருவள்ளூர்: திருத்தணி நகரத்தில் பாப்பிரெட்டிபள்ளி என்ற இடத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நடைபெற்ற தடுப்பூசி முகாம் பகுதியில் மா. சுப்பிரமணியன் நேற்று (நவம்பர் 14) ஆய்வுமேற்கொண்டார்.

மேலும், இந்தப் பகுதியில் 100 விழுக்காடு தடுப்பூசி முகாம் பழங்குடியின மக்களுக்குப் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்தப் பழங்குடியின மக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் போன்ற நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் தமிழ்நாடு அரசின் வீடு தேடி மருத்துவம் திட்டம், கரோனா தடுப்பூசி முகாம் ஆகிய திட்டங்கள் குறித்து ஆய்வுமேற்கொண்டேன். மிகச் சிறப்பான முறையில் மாவட்டத்தில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் 950 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது. திருத்தணியில் சிறப்பான முறையில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகிறார்கள், மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள 16 மாவட்டங்களில் சிறப்பான முறையில் தடுப்பூசி முகாம், வீடு தேடி மருத்துவம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. மக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றுவருகிறார்கள்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
முதலமைச்சர் ஸ்டாலினுடன் மா. சுப்பிரமணியன்

வீடு தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் சிறப்பான முறையில் நடைபெற்றுவருகிறது.

தமிழ்நாட்டில் மூன்று நாள்களில் மூன்று லட்சம் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 19 இடங்களில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் அமைக்கவும், திருத்தணி உள்பட அனைத்து மருத்துவமனைகளையும் மாற்றுவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது.

அதற்கான உள்கட்டமைப்பு நிதியைப் பெறுவதற்காக ஒன்றிய அரசிடம் சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தலைமை மருத்துவமனையாக மாற்ற 50 கோடி ரூபாய் தேவை மொத்தம் 19 தலைமை மருத்துவமனைகள் மாற்றுவதற்கு 950 கோடி ரூபாய் நீதி வேண்டும்.

இந்த நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கிய பின்பு தமிழ்நாட்டில் உள்ள 19 அரசு மருத்துவமனைகள் தலைமை மருத்துவமனைகளாக முறைப்படி அறிவிக்கப்படும். அதில் திருத்தணியும் அடங்கும்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் தடுக்கி விழுந்தால் தடுப்பூசி முகாம் என்ற அடிப்படையில் மக்களுக்குப் பயன்பெறும் வகையில் சிறப்பான முறையில் இந்தத் திட்டம் தற்போது நடைபெற்றுவருகிறது மக்களும் ஆர்வத்துடன் இந்த முகாமினைப் பயன்படுத்திவருகிறார்கள்" என்றார்.

இந்த முகாம் ஆய்வு நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம். பூபதி, சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:கோவையைத் தொடர்ந்து கரூரிலும் பள்ளி மாணவிக்குப்பாலியல் தொல்லை; மருத்துவர் மீது பாய்ந்த போக்சோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.