திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை அடுத்த பாடியநல்லூரில் லாரி ஓட்டுநரான வெங்கடேசன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இன்று (ஆகஸ்ட் 6) பிற்பகல் அவரது வீட்டின் கதவை சிலர் தட்டியுள்ளனர்.
இதையடுத்து வெங்கடேசன் சென்று கதவை திறந்தபோது, வீட்டுக்குள் அடையாளம் தெரியாத கும்பல் உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் நகைகளை பறித்து தப்பிச் சென்றுள்ளது.
இதைத் தொடர்ந்து வெங்கடேசன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற செங்குன்றம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 15 சவரன் நகைகள் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...மும்பையில் பட்டப்பகலில் கத்தி முனையில் வங்கியில் கொள்ளை