ETV Bharat / state

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: பூவை ஜெகன் மூர்த்தி - Puratchi Bharatham

திருவள்ளூர்: ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும், தனி நீதிமன்றம் அமைத்து வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

poonamalle
poonamalle
author img

By

Published : Jun 23, 2020, 7:09 PM IST

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். மீதமுள்ள ஐந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை குறைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்தத் தீர்ப்பை கண்டித்து புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தலைமையில், பூவிருந்தவல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அக்கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரோனா வைரஸ் காரணமாக தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

பூவை ஜெகன் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன் மூர்த்தி, ”நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கௌசல்யா, சங்கர் ஆணவக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை விடுதலை செய்தது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கௌசல்யா இதுகுறித்து மேல்முறையீடு செய்யப்படும் எனக் கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும். தனி நீதிமன்றம் அமைத்து விரைவாக வழக்கை விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:உடுமலை சங்கர் வழக்கு - மேல்முறையீடு செய்ய வலியுறுத்தப்படும் அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.