திருவள்ளூர்: திமுகவின் மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பாசறை பயிற்சி கூட்டம் இன்று (நவ.5) திருவள்ளூரில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்பதாக இருந்த நிலையில் அவர் உடல்நிலை காரணமாகப் பங்கேற்க முடியாததால், இளைஞர் அணிச் செயலாளர், இளைஞர் நலன் மேம்பாட்டு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
-
* வருமான வரித்துறை & அமலாக்கத்துறையின் கண்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும் தெரியும் ரகசியம் என்ன?
— M.K.Stalin (@mkstalin) November 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
* பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அவரவர் அலுவலகங்களை விட்டுக்கூட வெளியே வராதது ஏன்?
* அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் Conviction Rate 1 விழுக்காடு கூட இல்லையே ஏன்?
-… pic.twitter.com/N7QNjtQjC6
">* வருமான வரித்துறை & அமலாக்கத்துறையின் கண்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும் தெரியும் ரகசியம் என்ன?
— M.K.Stalin (@mkstalin) November 5, 2023
* பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அவரவர் அலுவலகங்களை விட்டுக்கூட வெளியே வராதது ஏன்?
* அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் Conviction Rate 1 விழுக்காடு கூட இல்லையே ஏன்?
-… pic.twitter.com/N7QNjtQjC6* வருமான வரித்துறை & அமலாக்கத்துறையின் கண்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும் தெரியும் ரகசியம் என்ன?
— M.K.Stalin (@mkstalin) November 5, 2023
* பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அவரவர் அலுவலகங்களை விட்டுக்கூட வெளியே வராதது ஏன்?
* அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் Conviction Rate 1 விழுக்காடு கூட இல்லையே ஏன்?
-… pic.twitter.com/N7QNjtQjC6
அப்போது அவர் கூறுகையில், "வாக்குச்சாவடி முகம் முகவர்களை நம்பித்தான் திமுக உள்ளது. நமது வெற்றி எவ்வித குறுக்கு வழிகளையும் கையாளாமல், நேர்மையான வெற்றியாக இருக்க வேண்டும். திமுகவின் மற்றொரு முகமாக வாக்குச்சாவடி முகவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை உரிய ஏழை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் நேரம் ஒதுக்க வேண்டும். மேலும் ஏழை எளியவர்கள் முதியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்" என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "எனது சனாதனம் குறித்த பேச்சு, பல்வேறு வகையாகத் திசை திருப்பப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன், ஏனென்றால் நான் பேசியதில் தவறு இல்லை. பாஜகவுடன் கூட்டணியாக உள்ளது அமலாக்கத்துறை மட்டுமே. தற்போது அமைச்சர் ஏ.வா.வேலு வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இரண்டு தினங்களாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
திமுகவினர் அமலாக்கத்துறைக்கும் அடக்குமுறைக்கும் ஒரு போதும் அஞ்ச மாட்டோம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பின்பற்றி, அனைத்து மாநிலங்களும் அவர்களின் தேர்தல் அறிக்கைகளில் காலை உணவுத் திட்டம் போன்ற சிறப்பான திட்டங்களைத் தொடங்கி வருகின்றது. ஆகையால், பிரதமர் மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சரைப் பார்த்தால் மட்டுமே அச்சம் வரும்.
தற்போது ஒன்றிய அரசின் 9 ஆண்டுக்கால சாதனையாக ஏழரை லட்சம் கோடி ஊழல் வெளியிடப்பற்றுள்ளது. இதை திமுகவினர் சொல்லவில்லை. மத்திய அரசின் தணிக்கை குழு தணிக்கை செய்து முறையான அறிக்கையாக வெளியிட்டது. இதைத்தொடர்ந்து அங்கு இருந்து அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்" என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொறுப்பு வகிக்கும் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை தனியார் பள்ளி மாணவர்கள் நடத்திய சிறுதானிய உணவுகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!