திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையை அடுத்த கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மாரி (வயது 20), சிலம்பரசன் (வயது 18). குடிபோதையில் இவர்கள் இருவரும் சாலையில் சென்று கொண்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட கிராம மக்கள் குடிபோதையில் இருந்த இந்த இளைஞர்கள் இருவரையும் பிடித்து அடித்தனர். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத்தொடர்ந்து கவரபட்டை காவல் துறையினர் போதை ஆசாமிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து, இளைஞர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பாலியல் தொழிலில் கிடைத்த பணத்தைப் பங்குபோடுவதில் தகராறு: 3 பேர் கைது!