ETV Bharat / state

பண மூட்டையுடன் அலையும் துரோக கூட்டணி -அதிமுக-வை சாடிய டிடிவி! - திருவள்ளூர் மாவட்டம் செய்திகள்

திருவள்ளூர்: மக்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றிவிடலாம் என துரோக கூட்டணி அலைகிறது என அதிமுகவை டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

பொன்னேரியில் அமமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட டிடிவி தினகரன் பேச்சு.

author img

By

Published : Mar 17, 2021, 12:28 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டப்பேரவை அமமுக வேட்பாளர் பொன். ராஜாவை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பொன்னேரியில் திறந்த வேனில் நின்று பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “அமமுக கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. எங்கள் கூட்டிணியை கைநீட்டி யாராலும் குற்றம் சுமத்த முடியாது. ஐந்து முறை ஆட்சியிலிருந்து தில்லுமுல்லு செய்து தீயசக்தி என எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்டதுதான் திமுக கூட்டணி.

பணமூட்டையுடன் அலைந்து கொண்டிருக்கும் துரோக கூட்டணி மற்றொரு கூட்டணி. துரோக கூட்டணி தமிழ்நாடு வாக்காளர்களுக்கு 2000 ரூபாய், 3000 ரூபாய் என பணம் கொடுத்து ஏமாற்றிவிடலாம் என தவறாக எடை போடுகிறார்கள். அவர்களுக்கு இந்தத் தேர்தலில் தக்க பாடம் கொடுக்க வேண்டும். ஒரு தரப்பு 1000 ரூபாய் தருகிறேன் எனவும் மற்றொரு தரப்பு 1500 ரூபாய் கொடுக்கிறேன் என்றும் கூறி வருகின்றனர்” என சாடினார்.

மேலும், “ஐந்து முறை ஆட்சியிலிருந்த திமுக என்ன செய்தது. மொத்தமாக சுரண்டிக்கொண்டுதான் சென்றார்கள். முதியோர் உதவித்தொகையைகூட நிதி நெருக்கடி எனக் கூறி வழங்காதவர்கள்தான் தற்போதைய ஆட்சியாளர்கள். தமிழ்நாடு வெற்றி நடை போடவில்லை, ஏழு லட்சம் கோடி கடன் சுமையில் தத்தளிக்கிறது ”என்றார்.

இதையும் படிங்க...'ஸ்டவ் அடுப்புக்கு டீசல்; சிலிண்டரின் விலை ரூ. 4500' - உளறியக்கொட்டிய திண்டுக்கல் சீனிவாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.