திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சித் தேர்தல், அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 51 வாக்குப்பதிவு மையங்களுக்கு 62 குழுக்கள் கொண்ட 248 வாக்குப்பதிவு அலுவலர்களுக்குத் தேர்தல் நடத்தும் விதிமுறைகள், தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகள், வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்த பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தொடங்கிவைத்தார்.
மேலும், தேர்தல் ஆணையம் விதிமுறைகளுக்கு இணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தப்படும். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 4,000 வாக்குப்பதிவு அலுவலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்குத் தேவையான பயிற்சி மூன்று கட்டங்களாக வழங்கப்படும், மாவட்டத்தில் இதுவரை விதிகளை மீறியதாக பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு