ETV Bharat / state

திருத்தணி கிளை சிறையில் மாநில மனித உரிமைத் தலைவர் ஆய்வு! - Human Rights President visit Tiruttani sub jail

திருத்தணி கிளைச் சிறையில் கைதிகளிடம் தமிழ்நாடு மாநில மனித உரிமைத் தலைவர் வி.கண்ணதாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தார்.

Tiruttani Branch prison
திருத்தணி கிளை சிறை
author img

By

Published : May 17, 2023, 12:29 PM IST

திருவள்ளூர்: தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் வி.கண்ணதாசன் திருத்தணி கிளைச்சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் கிளைச் சிறையில் உள்ள 14 கைதிகளிடமும் குறைகளைக் கேட்டு அறிந்தார், பின்னர் சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, கிளைச் சிறையில் உள்ள கைதிகளின் பாதுகாப்பு போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் வி. கண்ணதாசன், “தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிளைச் சிறையிலும் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன் அடிப்படையில் தான் திருத்தணியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு, அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகள் வழங்கப்படுகிறதா அல்லது காவல்துறையால் அவர்கள் தாக்கப்படுகிறார்களா? என்றும், அவர்கள் வன்கொடுமை செய்யப்படுகிறார்களா? என்று சிறை கைதிகளிடம் கேட்கப்பட்ட போது அப்படி எதுவும் இந்த சிறையில் நடக்கவில்லை என்று கூறினர்.

மேலும், ’’கிளைச்சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக வழங்கப்படுகிறது. சமீபத்தில் கள்ளச் சாராயத்தால் ஏற்படும் பிரச்னைகளில், திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு அதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். பின்னர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் சிறையில் அடைக்கப்பட்ட விவரங்களை காவல்துறையினரிடம் கேட்டு அறிந்துள்ளேன்.

கிளைச் சிறையில் உள்ள கைதிகளில் எவருக்கேனும் சட்ட உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட முதன்மை நீதிபதி மூலமாக வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளேன். மேலும் இந்த கிளைச்சிறையில் மொத்தம் 14 கைதிகள் உள்ளனர். இந்த கிளைச் சிறையில் சுமார் 38 பேர் வரை அடைக்கப்படலாம், ஆனால் 14 பேர் மட்டுமே உள்ளனர். தற்போது வரை அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத வகையில் கட்டடங்கள் அனைத்தும் தரமாக உள்ளது.

மேலும் இந்த கிளைச் சிறையில் சில கட்டடங்களில் மட்டும் பாதுகாப்பு இல்லை. அவ்வாறு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் அந்த கட்டடங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை. ஆனால் கைதிகள் வைக்கப்பட்டுள்ள கிளைச் சிறை பாதுகாப்பாக உள்ளது என உறுதிபடுத்தினார். தொடர்ந்து, அந்த கட்டடங்கள் எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் உள்ளது.

செங்கல்பட்டு & விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் நேர்ந்துள்ள மரணத்தில் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு மாநில மனித உரிமை ஆணையர் என்ற அடிப்படையில் அந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் விழிப்புடன் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஷ சாராய விவகாரத்தில் முக்கியக் குற்றவாளி கைது... அடுத்தடுத்து வெளிவரும் திருப்பங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.