இதுவரை திருவாரூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 61 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதில் 42 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு மாவட்ட செய்தியாளராகப் பணியாற்றிவரும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், ஓஎன்ஜிசியில் பணியாற்றும் ஊழியர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர் உள்ளிட்ட ஐந்து நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்கள் ஆறு பேரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதனால், திருவாரூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிவருவதால் திருவாரூர் மக்கள் பீதியில் உள்ளனர்.
இதையும் படிங்க: 75 நாள்களுக்குப் பின் திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்