ETV Bharat / state

'தலைவன் உயிர்தான் முக்கியமே தவிர கட்சி முக்கியமல்ல!' - Rajini Fan Club Secretary Marthandam interview

தலைவன் உயிர்தான் முக்கியமே தவிர கட்சி முக்கியமல்ல என திருவள்ளூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நகரச் செயலாளர் மார்த்தாண்டன் கூறியுள்ளார்.

ரஜினி ரசிகர் மன்ற நகரச் செயலாளர்
Rajini Fan Club Secretary
author img

By

Published : Dec 30, 2020, 6:35 AM IST

திருவள்ளூர்: அம்பானியைப் பின்னுக்குத் தள்ளியவர் என் தலைவன், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தவர் என் தலைவன் அவர் உயிர்தான் முக்கியம் என திருவள்ளூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நகரச் செயலாளர் மார்த்தாண்டன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன் என நேற்று (டிச. 29) தெரிவித்திருந்தார். இது குறித்து பல விமர்சனங்களும் கருத்துகளும் வந்தவண்ணம் உள்ளன. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நகரச் செயலாளர் மார்த்தாண்டன் பேட்டியளித்துள்ளார்.

ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் மார்த்தாண்டன்

அப்போது அவர், "ரஜினி தெரிவித்திருப்பது, எங்களைப் பொறுத்தவரை அவருடைய அண்ணாத்த திரைப்படம்தான் முக்கியம். அது எப்போது வரப்போகிறது என்று ஆவலுடன் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.

எங்களுக்கு கட்சி முக்கியமல்ல என் தலைவன்தான் முக்கியம். என் தாய் தகப்பன் போல என் தலைவனை நான் நேசிக்கிறேன், என் பிள்ளையைப் போல என் தலைவனை நான் நேசிக்கிறேன்.

நான் செத்தால்கூட என் உயிர்த் தலைவனுக்குத்தான், யார் என்ன சொன்னாலும் என் தலைவன் ரஜினி சொல்லும் சொல்தான் முக்கியம். தமிழ்நாட்டில் அம்பானியைவிட நாங்கள்தான் அதிகமாகச் சேவை செய்துள்ளோம்.

என் தலைவன் ஒரு பார்வை பார்த்தால்போதும் அதுவே எங்களுக்குப் போதும். அவருடைய உடல்நிலையைப் பார்த்துக்கொண்டு எப்போது அரசியலுக்கு வருகிறாரோ அப்போது வந்தால் போதும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரஜினி வழியில் ஆன்மீக அரசியலை முன்னெடுப்போம் - அர்ஜுன் சம்பத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.