தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு தவணைகளாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உத்தரவிட்டதன் பேரில் கடந்த மாதம் முதல் தவணையாக 2ஆயிரம் ரூபாய் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது தவணையாக 2ஆயிரம் ரூபாய, 14 வகை மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பினை ரேஷன் கடைகளில் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இன்று (ஜூன் 15) முதல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், திருவள்ளூர் தொகுதிக்குட்பட்ட மணவள நகர், பாரதி நகர், பெரியகுப்பம், வள்ளுவர் புரம், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா நிவாரண நிதியாக 2ஆயிரம் ரூபாய், 14 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் ஹரிகிருஷ்ணன், நகரச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.