ETV Bharat / state

திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Michaung cyclone: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 11:00 AM IST

திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்தப் புயல் நாளை ஆந்திர எல்லை பகுதிகளில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருவள்ளுவர் மாவட்டத்தில் நாளை (டிச.04) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது அதனுடைய தாக்கம் குறிப்பாக பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட கடலோரப் பகுதிகளில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் அடிப்படையில மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து இடங்களிலும் அனைத்து முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்ட அறிக்கையில், “புயல் காரணமாக வருகிற நான்காம் தேதி அதிக கன மழை ஏற்பட வாய்ப்புள்ளது. அன்றைய நாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. முன் ஏற்பாடு நடவடிக்கையாக பல்வேறு துறைகளை சார்ந்த 64 குழுக்கள் அமைத்து அனைத்து துறைகளையும் சார்ந்த அதிகாரிகளும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதே போல் புயல் காரணமாக அதிக காற்று வெள்ளமும் ஏற்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தற்காலிக தங்குமிடங்கள் மாவட்ட முழுவதும் 500 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவை புதிய வசதிகள் உடன் தயார் நிலையில் உள்ளன.

இதை தவிர இங்கு மீனவர் கிராமங்கள் மற்றும் பழங்குடியினர் அதிக வசிக்கக்கூடிய இந்த கடலோர பகுதிகளில் பெரிய அளவிலான ஆயிரம் பேர் தங்கக்கூடிய இடம் ஆண்டாள் மடத்திலும் 2000 பேர் தங்கக்கூடிய இடம் திருப்பாலைவனத்திலும் என ஐந்து தங்குமிடங்கள் கடந்த ஆறு மாதங்களாக மறு சீரமைப்பு செய்து தயார் நிலையில் வைத்திருக்கிறோம்.

இங்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் குறிப்பாக குடிநீர் கழிப்பறை சுத்தமான சுகாதாரமான ஏற்பாடுகள் மருத்துவ முகாம்கள் ஆரோக்கியமான பாதுகாப்பான சூடான உணவு வழங்குவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள் என்றும் அதேபோல் இங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஏற்கனவே அறிகுறிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளோ அந்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்தில் கொண்டு செல்ல தேவையான பேருந்து மற்றும் வாகன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன” என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புயல் எதிரொலி: சென்னையில் 7 விமானங்கள் சேவை ரத்து... எந்தெந்த விமானம் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.