ETV Bharat / state

கண்காணிப்பு கேமரா மூலம் பாதுகாக்கப்படும் திருவள்ளூர் மாவட்டம் - தீபாவளி பண்டிகை

திருவள்ளூர்: பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்கள் பாதுகாப்பிற்காக மாவட்டம் முழுவதும் நான்காயிரத்து 607 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Tiruvallur district protected by surveillance camera

author img

By

Published : Nov 12, 2020, 10:12 AM IST

இது குறித்து பேசிய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், "தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பொதுமக்கள் அனைவரும் கடை வீதிகளுக்கு சென்று புத்தாடைகளையும், அலங்காரப் பொருள்களையும் வாங்கிவந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு செல்லும்போது தங்கள் உடமைகளை பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்லவும், வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாத்துக் கொள்ளவும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி பொருள்களை வாங்கிச் செல்லவும் வேண்டும் என மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பண்டிகை கால விடுமுறை நேரத்தில் வெளியூர்களுக்கு செல்லும் நபர்கள் தங்களது வீடுகளை பாதுகாத்திட வீட்டின் விவரத்தை அவரவர்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவியுங்கள்.

மாவட்டத்தில் இந்த ஆண்டு 16 நபர்களுக்கு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில கடைகளை நிரந்தர அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. பொதுமக்கள் அரசு அனுமதி பெற்று இயங்கி வரும் பட்டாசு கடைகளில் பட்டாசு வாங்கி பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும்.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மாவட்டம் முழுவதும் நான்காயிரத்து 607 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: பட்டாசுகளை விற்றாலோ, வெடித்தாலோ நடவடிக்கை: டெல்லி காவல் ஆணையர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.