கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் முழு மூச்சோடு செயல்படுகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தினக்கூலி, மாத ஊதியம் பெறும் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் நிவாரணம் வழங்கி வருகின்றன. அதில் ஒரு அங்கமாக ஈக்காடு பகுதியில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. திருச்சபையின் சார்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூய்மைப் பணியாளர்கள், பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள், தினந்தோறும் வேலைக்கு சென்றால்தான் சாப்பாடு என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் விளிம்புநிலை மக்களுக்கு திருச்சபையின் சார்பாக 10 கிலோ அரிசி, காய்கறிகள் ஆகிய நிவாரண பொருள்கள் 300 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: மணப்பாறையில் சமூகப் பரவல்; நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் மெத்தனம்