திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் அதிக மணல் கடத்தல் நடைபெறுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தனிப்படை காவல் துறையினர் திடீரென நேற்று காலை முதல் திருத்தணி சித்தூர் சாலையில் சோதனை நடத்தினர்.
அப்போது மணல் கடத்திக்கொண்டு லாரி ஒன்று வேகமாக சென்றது. அதனை பின்தொடர்ந்து சென்ற காவல் துறையினர், லாரியை மடக்கி பிடித்தனர். இதனையடுத்து லாரியின் ஓட்டுநர் லாரியை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றார்.
மேலும் ஒரு லாரி அந்த வழியாக மணல் கடத்தி வந்தது. அந்த லாரியை மடக்கி பிடித்த காவல் துறையினர், அதிலிருந்த இருவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க...அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!