திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சிங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தோனீஸ்வரன். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தோனீஸ்வரன் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வேறு சமுதாயப் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று திருத்தணி அருகே உள்ள பொன்பாடி ரயில் நிலைய தண்டவாளத்தில் தோனீஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தால் அடித்து கொல்லப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தோனீஸ்வரன் காதலித்த பெண், அவரின் தாயார் மற்றும் அவரது அண்ணன் ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தண்டவாளத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை