ETV Bharat / state

திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் நிறைமணி வைபவம்! - திருவேற்காடு தேவி கருமாரி

திருவள்ளூர்: திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் நிறைமணி உற்சவத்தை முன்னிட்டு இரண்டு டன் காய், கனிகளால் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

காய், கனிகளில் கருமாரியம்மன் அலங்காரம்.
author img

By

Published : Oct 14, 2019, 10:58 AM IST

தமிழ்நாட்டில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற ஆலயங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவேற்காடு தேவி கருமாரியம்மன் ஆலயமும் ஒன்று. உலக ஜீவராசிகளின் பஞ்சத்தைப் போக்க அம்மன், தன் சரீரத்தில் அனைத்து விதமான காய்,கனி,தானியங்களை உற்பத்தி செய்து மக்களுக்குத் தந்தாள் என்பது ஐதீகம்.

திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் நிறைமணி வைபவம்

இதனை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு புரட்டாசி மாதமும் பௌர்ணமி நாளன்று திருவேற்காடு தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நிறைமணி உற்சவ வைபவம் நடைபெறும். அந்த வகையில் இன்று நடைபெற்ற நிறைமணி உற்சவத்தில் அம்மன் இரண்டு டன் காய், கனி, தானியங்கள் மற்றும் இனிப்புகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்குக் காட்சி அளித்து வருகிறார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் கடைசி நாளன்று இங்கு அலங்கரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைத்து, பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்குவர். அம்மனின் நிறைமணி அலங்காரத்தைக் காண ஆலயத்திற்கு பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

இதையும் படிங்க:

இனி அடுத்த தசராவில் சந்திப்போம்! விடைபெற்ற அம்மன்கள்!

Intro:திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் நிறைமணி வைபவ உற்சவவத்தை முன்னிட்டு 2 டன் காய், கனிகளால் அம்மன்
அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

Body:தமிழகத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆலயங்களில் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம் ஒன்று.இங்கு
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமியில் நிறைமனி உற்சவ வைபவம் நடைபெறும்.உலக ஜீவ ராசிகளின் பஞ்சத்தை போக்க அம்மன் தன் சரிரத்த்தில் அனைத்து விதமான காய்,கனி,தானியங்களை உற்பத்தி செய்து அனுக்கரித்தாக ஐதீகம். இதனை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு புரட்டாசி மாதம் பவுர்ணமி அன்றும் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் நிறைமனி உற்சவ வைபவம் நடைபெறும்Conclusion:அந்த வகையில் இன்று நடைபெற்ற நிறைமணி உற்சவவத்தில் அம்மன் 2 டன் காய்,கனி,தானியங்கள், இனிப்புகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.முன்று நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்த்தில் கடைசி நாளில் இங்கு அலங்கரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.அம்மனின் நிறைமணி அலங்காரத்தை காண ஆலயத்திற்கு பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.