ETV Bharat / state

திருவள்ளுவரின் தேரை ஓட்டும் ஔவையார்.. மயிலாடுதுறையில் சிறப்பாக நடைபெற்ற ஊர்வலம்! - திருவள்ளுவரின் தேரை ஓட்டும் ஔவையார்

Thiruvalluvar Day: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறையில் திருவள்ளுவர் சிலையுடன் நடைபெற்ற ரத ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள், தமிழறிஞர்கள் பங்கேற்று, வள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருவள்ளுவரின் தேரை ஓட்டும் ஔவையார்
திருவள்ளுவரின் தேரை ஓட்டும் ஔவையார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 2:25 PM IST

திருவள்ளுவரின் தேரை ஓட்டும் ஔவையார்

மயிலாடுதுறை: உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள், பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவடைவதில்லை. தை முதல் நாள் பொங்கல் விழாவும், தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமாகவும், 3ஆம் நாள் காணும் பொங்கல் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆயிரத்து 333 திருக்குறள்கள் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்ற திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில்,பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான இன்று (ஜன.16), திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகின்றது. இதனையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்குறள் பேரவை சார்பில், திருவள்ளுவர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

இதையும் படிங்க: சமூகநீதியா? சனாதனமா? - ‘திருவள்ளுவர் தினம்’ வாழ்த்தில் கருத்து மோதல்.. டெல்லி என்ன சொல்கிறது?

இந்த திருவள்ளுவரின் சிலையுடன் கூடிய தேரை, ஔவையார் ஓட்டுவது போல் அமைந்திருந்தது. காவிரிக் கரையிலிருந்து துவங்கிய திருவள்ளுவர் தேர் ஊர்வலம், மயிலாடுதுறையின் முக்கிய வீதிகள் வழியே சென்று நகராட்சி மேல்நிலைப் பள்ளியுடன் நிறைவடைந்தது. முன்னதாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் மீனா, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, தேர் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த ஊர்வலத்தில் திரளான பொதுமக்கள், தமிழறிஞர்கள், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனையடுத்து நடைபெற்ற மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 108வது கூட்டத்தில், தமிழ் அறிஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பிரபாகரன் என்ற இளைஞர், 133 அதிகாரங்களால் திருவள்ளுவர் உருவப் படத்தை தத்ரூபமாக வரைந்து, அதனை தமிழ்ச் சங்கத்துக்கு வழங்கினார்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் களைகட்டிய பொங்கல் திருவிழா.. பாரம்பரிய உடையணிந்து பொது மக்கள் பொங்கல் கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.