திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சித்தூர் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டுவருகிறது. நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த ஏடிஎம் மையத்தில் இருந்த கண்ணாடியையும், கண்காணிப்புக் கேமராவையும் உடைத்து பின்பு ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சித்துள்ளனர்.
இதேபோல் சித்தூர் சாலைப் பகுதியில் பட்டி விநாயகர் கோயிலில் உள்ள உண்டியல் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் திருட முயற்சித்துள்ளனர். ஆனால் இரு இடங்களிலும் பணம் எடுக்க முடியாமல் திருடர்கள் தப்பி ஓடினர்.
இந்நிலையில், இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து திருத்தணி அடுத்த பொதட்டூர் பேட்டையைச் சேர்ந்த ஜெயவேலு (28) என்பவரைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: வராக நதி ஆறு தூர்வாரப்பட்டதால் தங்கு தடையின்றி செல்லும் மழைநீர்