ETV Bharat / state

ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவ விழா தொடக்கம்! - thai festival starts news

திருவள்ளூர்: ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் தை பிரம்மோற்சவ விழா தொடக்கம்!

author img

By

Published : Jan 9, 2021, 12:31 PM IST

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் தை மாத பிரமோற்சவ விழா இன்று (ஜன. 9) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரணமாக சுவாமி திருவீதி புறப்பாடு ரத்து செய்யப்பட்டு, கோயிலை சுற்றி வந்து வாகன மண்டபத்தில் எழுந்தருள்வார் எனக் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று (ஜன. 9) காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து காலை 7 மணிக்கு தங்க சப்பரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் தை பிரம்மோற்சவ விழா தொடக்கம்!

ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் பிரம்மோற்சவ திருவிழாவில் திருவீதி உலா இந்த ஆண்டு இல்லாததால் பக்தர்கள் கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து நாளை (ஜன. 10) காலை ஹம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் வீரராகவப் பெருமாள்.

இதையும் படிங்க...புதுச்சேரி ஆட்சியருக்கு நச்சுக்கலந்த தண்ணீர் கொடுக்கப்பட்டதா? - சிபிசிஐடி விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.