ETV Bharat / state

குற்றச்செயல்களைத் தடுக்க திருவள்ளூரில் ஹலோ போலீஸ் சேவை தொடங்கிவைப்பு! - குற்றச் செயல்களை தடுக்க புதிய திட்டம்

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, லாட்டரி விற்பனை உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க சிறப்பு 'ஹலோ போலீஸ் சேவை'யை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று (செப்டம்பர் 10) அரவிந்தன் தொடங்கிவைத்தார் .

குற்றச் செயல்களை தடுக்க ஹலோ போலீஸ் சேவை: திருவள்ளூர் எஸ்பி தொடங்கி வைப்பு!
Sp aravindan launch hello police service
author img

By

Published : Sep 11, 2020, 8:44 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

அதன்படி தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட போலி மதுபானங்கள் விற்பனை, மணல் கொள்ளை, செம்மரக்கட்டை கடத்தல் கஞ்சா கடத்தல் போன்ற குற்றங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்காக 'ஹலோ போலீஸ் சேவை' என்ற திட்டத்தை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் நேற்று (செப்டம்பர் 10) தொடங்கிவைத்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், "குற்றங்களை பற்றி பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் புகார் அளிக்க விரும்பினால் 90033 90050 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலம் அல்லது வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இந்தத் திட்டத்திற்காக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பிரத்யேகமான அறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் வரும் புகார்கள் மீது சிறப்பு காவல் துறையினர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்பனைசெய்வது போன்ற குற்றங்களைக் குறைக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.