திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் தானியங்கி நகரும் படிக்கட்டு (எக்ஸ்லேட்டர்), மின்தூக்கி (லிஃப்ட்) வசதிகள் ஆகியவை இரண்டு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால், சட்டப்பேரவை உறுப்பினர் விஜி ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்கள்.
பின்னர் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் பேசுகையில்,
“புட்லுார் ரயில் நிலையம், செவ்வாய்பேட்டை ரயில் நிலையம், வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மேம்பால வேலைகள் விரைவாக முடிவடைந்து திறக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.