திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர் திருவள்ளூரில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று வேலை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திருவள்ளூரிலிருந்து புறப்பட்டு புட்லூர் ரயில்வே கேட்டை கடந்து சென்றுள்ளார்.
அப்போது சென்னையிலிருந்து திருத்தணி நோக்கிப் புறப்பட்ட விரைவு ரயில் அந்தப் பெண் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியதில் கால் மட்டும் புட்லூர் ரயில் நிலையம் அருகே விழுந்துவிட உடல்கள் துண்டாகி இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சிதறிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து திருவள்ளூர் ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து உடல் சிதறி பலியான அந்தப் பெண்ணின் ஒரு சில உடல் உறுப்புகளை மட்டும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இரவு நேரம் என்பதால் போதிய வெளிச்சம் இல்லாததால் இன்று (பிப்.5) காலை மீதமுள்ள உடல் பாகங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:திமுக வட்டசெயலாளர் கொலை வழக்கு: 7 பேர் கைது