ETV Bharat / state

திட்டம் தீட்டி கொலை செய்த கும்பல்; இருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு! - நீதிமன்ற நீதிபதி தீப்தி அறிவுநிதி

திருவள்ளூர்: முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

thiruvallur
author img

By

Published : Nov 1, 2019, 11:35 AM IST

திருவள்ளூரை அடுத்த ஆவடியைச் சேர்ந்த பூபாலன் என்பவர், முன்விரோதம் காரணமாக பிரேம்குமார் என்பவரை, தனது நண்பர்களோடு சேர்ந்து 2008ஆம் ஆண்டு கொலை செய்தார். இந்நிலையில் பூபாலனை பழிக்குப்பழி வாங்க முடிவு செய்த பிரேம்குமாரின் நண்பர்களான, பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த நாராயணன், செல்வேந்திரன், சுரேஷ், மகேந்திரன் ஆகியோர் பூபாலனிடம் நெருக்கமாக பழகிவந்துள்ளனர்.

2010ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி, அந்த நான்குபேரும் பூபாலனை மது அருந்துவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். அதனைக் கண்ட பூபாலனின் சகோதரர் தங்கராஜ் சந்தேகத்தின் பேரில் பின் தொடர்ந்து சென்று பார்த்துள்ளார். அப்போது பட்டாபிராம் அடுத்த கோபாலபுரம் பகுதியில், கத்தியால் வெட்டுப்பட்ட காயங்களுடன் பூபாலன் பிணமாகக் கிடப்பதைக் கண்டார். இதனையடுத்து தங்கராஜ் அளித்த புகாரின்பேரில், பட்டாபிராம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஒருங்கிணைந்த நீதிமன்றம் திருவள்ளூர்

இந்த வழக்கானது திருவள்ளூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தீப்தி அறிவுநிதி, கொலைக் குற்றவாளிகளான நாராயணன், செல்வேந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் ஆறு மாதம் கூடுதல் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றவாளிகள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: நெல்லை மேயர் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது!

Intro:
திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து திருவள்ளூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தீப்தி அறிவுநிதி பரபரப்பு தீர்ப்பு:

Body:31-10-2019

திருவள்ளூரை அடுத்த ஆவடியைச் சேர்ந்த பூபாலன் என்பவர் முன்விரோதம் காரணமாக பிரேம்குமார் என்பவரை தனது நண்பர்களோடு சேர்ந்து கொலை செய்து விடுகிறார். இந்நிலையில் பூபாலனை தீர்த்துக் கட்ட முடிவு செய்த பிரேம்குமாரின் நண்பர்கள் பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த நாராயணன், செல்வேந்திரன், சுரேஷ், மற்றும் மகேந்திரன் ஆகியோரை பூபாலனிடம் நெருக்கமாக பழகியுள்ளனர். இந்நிலையில் இந்த 4 பேரும் பூபாலனை கடந்த 17.2.2010 அன்று மது அருந்துவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். அதனைக் கண்ட பூபாலனின் சகோதரர் தங்கராஜ் சந்தேகத்தின் பேரில் பின் தொடர்ந்து சென்று பார்த்துள்ளார். பட்டாபிராம் அடுத்த கோபாலபுரம் பகுதியில் கத்தி காயங்களுடன் பூபாலன் பிணமாக கிடப்பதை அறிந்த தங்கராஜ் பட்டாபிராம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளர் விஜயலட்சுமி வழக்குப் பதிவு செய்து திருவள்ளூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில்அரசு தரப்பில் வழக்கறிஞர் மோகன்ராம் வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி தீப்தி அறிவுநிதி இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நாராயணன் மற்றும் செல்வேந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் கட்டத் தவறினால் 6 மாதம் கூடுதல் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். தீர்ப்புக்குப் பின் இருவரும் புழல் சிறையில் அடைத்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.