திருவள்ளும் மாவட்டம் ஜே.என். சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக வடகிழக்கு பருவமழை 2020ஆம் ஆண்டிற்கான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "திருவள்ளுர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டும் 22 மாற்றுக்குழுக்கள் (Backup Team) மொத்தம் 64 குழுக்களான ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பொன்னேரி, தம்மிடிப்பூண்டி திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 133 பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 2015ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கின்போதே கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை தங்கவைக்க தற்காலிக முகாமில் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிக்கு 9 குழுக்கள் அமைக்கப்பட்டு ஒரு குழுவிற்கு மூன்று நபர்கள் வீதம் 27 உறுப்பினர்கள் இருப்பர். தற்காலிக முகாமில் குடிநீர், கழிப்பிட வசதி, மின்வசதி, உணவு பொருட்கள், தற்காலிக மின்வசதி உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு பால் போன்றவைகளை போதுமான அளவில் இருப்பதையும் உள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.
முகாமில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் வாரியாக கணக்கெடுப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருப்பதை உறுதி செய்தல். மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தங்களது எல்லையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி கட்டுப்பாட்டு அறை எண்களான 044-27061177, 1044-276661746 -க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் வாட்ஸ் ஆப் எண்கள் திருவள்ளூர் 9444317862, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் பொன்னேரி 9444317863 ஆகிய எண்களுக்கும் தகவல் தெரிவிக்கலாம்." எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்