ETV Bharat / state

'திமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை என்பது ஓர் விளம்பரம்' - அமைச்சர் பாண்டியராஜன் - திருவள்ளூர் ரோட்டரி சங்கம்

திருவள்ளூர்: ஆன்லைனில் திமுக உறுப்பினர் சேர்க்கை என்பது விளம்பரத்திற்காக நடத்தப்படுகிறது. மறுபுறும் அதிமுகவில் சத்தமில்லாமல் 18 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

minister
minister
author img

By

Published : Sep 25, 2020, 12:15 PM IST

திருவள்ளூர் மாவட்டம், ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு பேட்டரியால் இயங்கக்கூடிய வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மருத்துவமனை முதல்வர் முன்னிலையில் கரோனா சிறப்பு வார்டில் உணவுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் எடுத்துச் செல்ல பயன்படும் பேட்டரியால் இயங்கக்கூடிய வாகனத்தை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், "ஆன்லைன் மூலம் திமுகவில் உறுப்பினர் சேர்க்கை என்பது விளம்பரத்திற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் முதல் முதலமைச்சர் வரை அனைவரையும் அவர்கள் உறுப்பினர்களாக சேர்க்க கூடிய நிலை வந்துள்ளது.

அதிமுக சார்பில் குறுகிய காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சத்தமில்லாமல் 18 லட்சத்து 60 ஆயிரம் பேரை அதிமுக பாசறையில் உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தேர்தல் வெற்றி வேண்டுதலுக்காக ஹெலிகாப்டரில் பறந்த அதிமுக நிர்வாகி...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.