ETV Bharat / state

திருவள்ளூரில் சோகம்: தம்பி மகனை காப்பாற்ற சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - திருவள்ளூர் வெள்ளப்பெருக்கு செய்தி

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆறு வெள்ளத்தில் சிக்கிய தம்பி மகனை காப்பாற்றியவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Thiruvallur man who went to save his nephew drowned in river, Thiruvallur man rescued after two days, thiruvallur kosasthalai river flood, திருவள்ளூரில் மகனை காப்பாற்ற சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த பாலையன்
author img

By

Published : Dec 7, 2021, 4:38 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் காரணிசாம்பேட் கிராமத்தில் வசிக்கும் பாலையன் (40), அவரது தம்பி பாலாஜியின் எட்டு வயது மகன் கார்த்திக் இருவரும் காரணிசாம்பேட் அருகே கொசஸ்தலை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

கார்த்திக் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென நீரில் அடித்துச்செல்லப்பட்டதை பார்த்த பாலையன், கார்த்திகை காப்பாற்றி கரை சேர்த்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக பாலையன் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

2 நாள்கள் தேடுதல்

தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய காவலர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தாலுகா உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் கடந்த இரண்டு நாட்களாக பாலையனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Thiruvallur man who went to save his nephew drowned in river, Thiruvallur man rescued after two days, thiruvallur kosasthalai river flood, திருவள்ளூரில் மகனை காப்பாற்ற சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த பாலையன்

இந்நிலையில், பாலையனின் உடல் புதூர் ஊராட்சி எல்லப்பநாயுடுபேட்டை தரைப்பாலம் அருகே நேற்று (டிசம்பர் 6) காலை கண்டறியப்பட்டது. பின்னர், பாலையனின் உடலை மீட்ட காவல்துறையினர், திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: வீட்டில் பிரசவம், குழந்தை உயிரிழப்பு : தாய் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.