ETV Bharat / state

கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் - தேர்தல் பறக்கும் படை

திருவள்ளூர்: பூவிருந்தவல்லியில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 89 லட்சம் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல்  செய்தனர்.

திருவள்ளூர் சார் ஆட்சியர்
author img

By

Published : Apr 6, 2019, 11:34 AM IST

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் தேர்தல் கண்காணிப்பு நிலை குழுவினர் பொறுப்பு அலுவலர் சக்தி விநாயகமூர்த்தி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சி.டி.எச் சாலையில் ஐ.சி.சி, சிண்டிகேட், சி.எம்.எஸ் ஆகிய தனியார் வங்கி ஏடிஎம்களுக்கு பணம் நிரப்புவற்தாக மூன்று வாகனங்கள் வந்தது. அதனை மடக்கிய தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அந்த மூன்று வாகனத்தில் இருந்த மொத்த தொகையான 2 கோடியே 89 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாததால் பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி தேர்தல் உதவி அலுவலரும் வட்டாட்சியருமான புனிதவதியிடம் ஒப்படைத்தனர். அங்கு வருமான வரித்துறை அதிகாரிகளை வரவழைத்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் பறிமுதல் செய்த பணத்திற்கு ஆவணம் காண்பிக்கபடாததால் 2 கோடியே 89 லட்சத்தை கடைசியாக பூந்தமல்லியில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

6-04-2019

திருவள்ளூர் 

திருவள்ளூர் அருகே  பூவிருந்தவல்லியில்    உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 89 லட்சம் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல்  செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில்  மக்களவை தேர்தலுடன் பூந்தமல்லி சட்டமன்ற  தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் மாவட்ட முழுவதும் தேர்தல் விதிமுறைகள்  நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் தேர்தல்   கண்காணிப்பு  நிலை குழுவினர் பொருப்பு அலுவலர் சக்தி விநாயகமூர்த்தி தலைமையில்   வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  அவ்வழியாக சி.டி.எச் சாலையில் ஐ.சி.சி,சிண்டிகேட், சி.எம்.எஸ் ஆகிய  தனியார் வங்கி ஏடிஎம்களுக்கு பணம் நிரப்பும் 3 வாகனம்   வந்தது. அதனை மடக்கிய தேர்தல் அதிகாரிகள் 3  வாகனத்தையும் சோதனை செய்தனர். அதில்  வாகனத்தில் கொண்டு வரப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து 3 வாகனத்தில் இருந்த மொத்த தொகையான 2.கோடியே 89 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து  பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி தேர்தல்  நடத்தும் உதவி அலுவலரும் பூந்தமல்லி வட்டாட்சியருமான  புனிதவதியிடம் ஒப்படைத்தனர். அங்கு வருமான வரித்துறை அதிகாரிகளை வரவழைத்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால் பறிமுதல் செய்த  பணத்திற்கு ஆவணம் காண்பிக்கபடாததால் 2 கோடியே 89 லட்சத்தை பூந்தமல்லியில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Visual ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.