ETV Bharat / state

திருவள்ளூர் காவல் துறைக்கு ஸ்காச் விருது! - காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்

கரோனா தொற்றைச் சிறப்பாகக் கையாண்டமைக்கு, திருவள்ளூர் காவல் துறைக்கு ஸ்காச் விருது கிடைத்துள்ளது. இதற்காகத் தனது நன்றியினை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Thiruvallur district police have won the Skoch award

author img

By

Published : Dec 18, 2020, 6:54 AM IST

திருவள்ளூர்: ஸ்காச் விருது கிடைக்க உறுதுணையாக இருந்த மாவட்ட மக்களுக்கு, காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் திறனாகச் செயல்படும் நிறுவனங்கள், அரசு அமைப்புகள் என அனைத்திலும் சிறப்பாகச் செயல்படும் துறை / அமைப்பு ஆகியவற்றுக்கு ஸ்காச் விருது வழங்கப்படுகிறது. தற்போது, அது திருவள்ளூர் காவல் துறைக்குக் கிடைத்துள்ளது.

திருமழிசை தற்காலிக காய்கறிச் சந்தையை, கரோனா காலத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி மக்கள் சந்தைக்கு வந்துசெல்லும்படி கவனத்தோடு அமைத்து, அதனைக் கடைசிவரை கடைப்பிடிக்க பெரும் பங்காற்றியதற்காகத் திருவள்ளூர் காவல் துறைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

  • Happy to share that Thiruvallur district police have won the Skoch award in response to Covid pandemic category. Instant responder to improve social distancing (IRIS) which was used in Thirumazhisai temporary vegetable market has won the award. Thank you everyone for the support pic.twitter.com/ZnCmf0D2xM

    — Aravindhan P IPS (@aravindhanIPS) December 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், இந்த விருது கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட மக்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.