ETV Bharat / state

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்!

பேரணியாக வந்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்களை வரவேற்று பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

author img

By

Published : Feb 4, 2022, 3:01 PM IST

திருவள்ளூர்: புற்றுநோய் குறித்த தவறான கருத்துக்கள் புற்றுநோயை சுற்றியுள்ள கட்டுக் கதைகள் மற்றும் அறிகுறிகளை அடையாளம் காணவும் சரியான சிகிச்சையைப் பெறவும் இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலும் புற்று நோய் ஏற்படாத வண்ணம் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ஆம் தேதி உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையடுத்து திருவள்ளூர் அடுத்த பாண்டூர் பிரியதர்ஷினி பல் மருத்துவமனை மாணவர்கள் சார்பில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்திரா கல்வி குழுமத்தின் நிர்வாக இந்திரா ராஜேந்திரன் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக வந்த மாணவர்களை ஆட்சியர் அலுவலகம் எதிரே மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

இதனை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

பிரியதர்ஷினி பல் மருத்துவமனை முதல்வர் சிவபாதசுந்தரம் துணை முதல்வர் வீரகுமார் முன்னிலையில் நடைபெற்ற பேரணியில் 150-க்கும் மேற்பட்ட பல்மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பப்ஜி மதன் மனைவியிடம் லஞ்சம் கேட்ட அலுவலர் பணியிடை நீக்கம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.