ETV Bharat / state

திருவள்ளூரில் 627 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள்! - திருவள்ளூரில் 627 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது

திருவள்ளுர்: வாக்கு என்னும் மையத்தை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர் பொன்னையா, மாவட்டத்தில் 627 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் அலுவலர் பொன்னையா
தேர்தல் அலுவலர் பொன்னையா
author img

By

Published : Apr 5, 2021, 8:13 PM IST

திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையமானது, திருவள்ளுர் அடுத்த வேப்பம்பட்டிலுள்ள ஸ்ரீராம் அறிவியல் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தை மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர்கள் இன்று (ஏப்.5) ஆய்வு செய்தனர்.

அதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பொன்னையா, “திருவள்ளூர் மாவட்டத்தில் 267 பதற்றமான வாக்குச்சாவடிகள் மையங்கள் உள்ளன. அதில், மிகவும் பதற்றமாக 15 வாக்குச்சாவடி மையங்கள் காணப்படுகின்றன. அதற்கான பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா அச்சம் காரணமாக வாக்குப்பதிவு மையத்திற்கு வரக்கூடிய வாக்காளர் அனைவருக்கும் வலது கைக்கு கையுறை, முகக்கவசம் கொடுக்கப்படும். வாக்கு என்னும் மையத்தில் 160 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

செய்தியாளரைச் சந்தித்த ஆட்சியர் பொன்னையா

அதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறியதாவது, “மாவட்டம் முழுவதும் துணை ராணுவ வீரர்கள், காவல் துறையினர் உள்பட 4ஆயிரத்து 350 பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடி மையத்தில் கூடுதலாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை நிறுத்தப்படவுள்ளது” என்றார்.

இதேபோல், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் பா.பொன்னையா, மண்டல குழுக்கள் வாயிலாக வாக்குச்சாவடிகளுக்கு, வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்கள் எடுத்துச் செல்லப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேர்தல் நடத்தும் அலுவலகத்தை ஆய்வு செய்த ஆட்சியர் பொன்னையா

இதையும் படிங்க: சென்னை சட்டப்பேரவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.