ETV Bharat / state

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியில் திருவள்ளூர் வீரர்! - Thiruvallur

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்டர் என்பவரை, மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தேர்வு செய்துள்ளது.

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியில் திருவள்ளூர் வீரர்!

author img

By

Published : Mar 1, 2023, 6:16 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர், விக்டர். மாற்றுத்திறனாளியான இவர், பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகிறார். இவ்வாறு மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திறமையாக விளையாடி வெற்றி பெற்றதால், விக்டர் இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி உள்ளார்.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் விக்டரை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் விக்டர், வருகிற மார்ச் 3ஆம் தேதி நேபாளத்தில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பாக பங்கு பெற உள்ளார். அதேநேரம் தமிழ்நாட்டின் வீரர்களில் இவர் மட்டுமே இந்திய அணியில் தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்து கிரிக்கெட் வீரர் விக்டர் கூறுகையில், “15 வருட காலமாக மாற்றுத்திறனாளி பிரிவில் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்தேன். ஏழ்மையான குடும்பத்தில் வசித்து வருவதால், தமிழ்நாடு அரசு எனக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளை அளித்து உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டிற்கு என்னால் முடிந்த அளவுக்கு பெருமை சேர்ப்பேன் என்ற நோக்கத்துடன் மட்டுமே, கிரிக்கெட் விளையாட்டை முழு நேர விளையாட்டாக விளையாடிக் கொண்டு வருகிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேசிய அளவிலான வாலிபால்: மதுரை அமெரிக்கன் கல்லூரி பெண்கள் அணி வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.